கடும் எதிர்ப்பு எதிரொலி., தனது முடிவில் திருத்தும் செய்த உச்சநீதிமன்றம்!! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகளின் தீர்ப்புகள் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தநிலையில் ரஞ்சன் கோகய் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்து மக்களாலும் அவர்களது தாய் மொழியில் படிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.  இதனையடுத்து இனி உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகள் ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடா, அசாம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளில்  உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. என என உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்தது இதில் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி இடம் பெறவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் போது இந்தி, தெலுங்கு, கன்னடா, அசாம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளில் பதிவேற்றம் செய்யப்படுவது போல தமிழ் மொழியிலும் பதிவேற்றம் செய்யவேண்டும் என ராமதாஸ், ஸ்டாலின் , உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர் 

இந்தநிலையில்  இந்தி, தெலுங்கு, கன்னடா, அசாம், ஒடியா-வை தொடர்ந்து தமிழ் உள்பட 7 பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மொழி மாற்றம் செய்து வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court judgement in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->