முதல்வர் பழனிசாமி அறிவிப்பால், ஏமாற்றம்! அதிர்ச்சியில் மக்கள்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிர்வாக வசதிகளை சரி செய்வதற்காக, மிகப்பெரிய மாவட்டங்களை பிரிக்கும் பணிகளானது  தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் நடைபெற்றது. மக்கள்தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களை இரண்டாகப் மூன்றாக பிரித்து தமிழக அரசு புதிய மாவட்டங்களை உருவாக்கி இருந்தது. 

சிறிய மாவட்டங்களே மிகப்பெரிய வளர்ச்சியை அடைகின்றன என அடிக்கடி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வந்த நிலையில், குறிப்பாக வேலூர் விழுப்புரம் காஞ்சிபுரம் திருவண்ணாமலை போன்ற பெரிய மாவட்டங்களை இரண்டு மூன்றாக பிரிக்க வேண்டும் என குரல்கொடுத்து வந்தார்.  நீண்ட காலமாக கோரிக்கையாகவே இருந்த இந்த கோரிக்கையானது, கடந்த இரண்டு வருடங்களாக செயல்வடிவம் கொடுக்கபட்டு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டங்களை அறிவித்தார். 

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து,  திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் என இரண்டாகவும், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம்  கள்ளக்குறிச்சி என இரண்டாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தை காஞ்சிபுரம், செங்கல்பட்டு ன இரண்டாகவும், வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வேலூர் மாவட்டம் எனவும், நாகப்பட்டினம் மாவட்டத்தினை இரண்டாகப் பிரித்து நாகப்பட்டினம் மயிலாடுதுறை எனவும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 32 மாவட்டங்கள் ஆக இருந்த மாவட்டங்கள் எண்ணிக்கை தற்போது 38 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில் மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கும்பகோணம் மாவட்டம், சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து எடப்பாடி மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என கோரிக்கைகள் அடுத்தடுத்து வந்தவண்னம் உள்ளது. இந்நிலையில் நேற்று  ஈரோடு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போதைய நிலையில் இனி தமிழகத்தில் மாவட்டங்களைப் பிரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார். 

இதனால் புதிய மாவட்டங்களை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. குறிப்பாக கும்பகோணம் மாவட்டத்தை எதிர்பார்த்து அந்த மாவட்டத்தில் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புதல் உள்ளிட்ட நூதன போராட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. மேலும் கும்பகோணம் பகுதிகளில் கும்பகோணம் மாவட்டம் வேண்டும் என வலியுறுத்தி கடைகள் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதலமைச்சரின் அறிவிப்பு எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hereafter not thinking about new districts said Cm Palanisamy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->