பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,! - Seithipunal
Seithipunal


ஹரியாணா மாநிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பஜன் லாலின் இளைய மகனான குல்தீப் பிஷ்னோய், ஆதம்பூா் தொகுதியிலிருந்து தோ்வானார். இவர் 4 முறை எம்.எல்.ஏ பதவியும், 2 முறை எம்.பி. பதவியும் வகித்துள்ளாா்.

ஹரியாணா மாநிலத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் செய்யப்பட்டபோது, மாநிலத் தலைவா் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்று குல்தீப் பிஷ்னோய் அதிருப்தி தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் குல்தீப் பிஷ்னோய் கட்சிமாறி வாக்களித்தாா். இதனால் காங்கிரஸ் வேட்பாளா் அஜய் மாக்கன் தோல்வியடைந்தாா். இதன் பின்னர், காங்கிரஸ் அவரது கட்சி பொறுப்புகளை பறித்தது.

இதனை தொடர்ந்து நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக குல்தீப் பிஷ்னோய், சட்டப் பேரவைத் தலைவா் ஜியான் சந்த் குப்தாவிடம் கடிதம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து டெல்லியில், ஹரியாணா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் அவர் பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளார்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana Congress MLA joins BJP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->