ஹரியானாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ், பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி.! வெல்லப்போவது யார்? - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 40 தொகுதிகளில் வென்றுள்ளது. அந்த மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கான தேவையான 46 தொகுதிகளை எந்தக் கட்சியும் பெறாத நிலையில், சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரம் செயல்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், காங்கிரசும் அம்மாநிலத்தில் உள்ள எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே தேர்தலை சந்தித்தது. 

இந்தநிலையில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 75 தொகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டது . ஆனால் பாஜக 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 46 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இந்திய தேசிய லோக் தள் கட்சி, கோபால் கன்டாவின் ஹரியானா லோகித் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. 

பாஜகவிலிருந்து வெளியேறி அதிருப்தியாளர்கள் 4 பேர் உள்பட சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேர் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதனால் ஹரியானாவில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை நிர்ணயம் செய்வதில் ஜனநாயக் ஜனதா கட்சியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

ஹரியானாவில் ஆட்சியமைக்கும் பெரும்பான்மைக்கு 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும், ஆனால் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்கும் நடவடிக்கையில் பாஜக தீவிரம் காட்டி அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஹரியானா லோகித் கட்சி தலைவர் கோபால் கன்டா உள்ளிட்ட 2 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hariyana election result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->