ராகுலால் தான் பதவியை ராஜினாமா செய்தேன்., காங்கிரஸ் பொதுச் செயலாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!! - Seithipunal
Seithipunal


2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 மக்களவை தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் போனது 

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், ராகுலின் இந்த முடிவை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி அவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் தெரிவித்தது ஆனால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவில் ராகுல் உறுதியாக இருந்தார்.

இதனையடுத்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா-வை  நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி அறிவித்துள்ளது.  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக இடைக் கால தேர்வுசெய்யபட்ட மோதிலால் வோரா  மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்துள்ளார் 

இந்தநிலையில், கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஹரீஷ் ராவத் இன்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராகுல் காந்தி பத​வியில் தொடர வேண்டும் என தெரிவித்த அவர், அதனை வலியுறுத்தும் விதமாக  தான் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஹரீஷ் ராவத், தெரிவித்தார் தேர்தல் தோல்விக்கு தனிநபர் ஒருவரை பொறுப்பாக்க முடியாது என கருத்து  தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harish rawat says about rahul gandhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->