ராகுலை தொடர்ந்து காங்கிரசில் மூத்த தலைவர் ஒருவர் பதவி விலகல்!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் இதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. 

மேலும் அவர் ராஜினாமா முடிவை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காத ராகுல் காந்தி தனது முடிவிலிருந்து மாறப் போவதில்லை என ஏற்கனவே தெரிவித்து வந்த ராகுல்.

நேற்று காலை திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்ட ராகுல் அதில் ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் கொடுத்து விட்டேன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியையும்  ராஜினாமா செய்கிறேன் எனவும் காங்கிரஸ் செயற்குழு உடனடியாக கூடி புதிய தலைவரை  தேர்வு செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார்  

இதனையடுத்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக  மோதிலால் வோரா-வை  நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி அறிவித்துள்ளது.  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக இடைக் கால தேர்வுசெய்யபட்ட மோதிலால் வோரா  மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்துள்ளார் 

இந்தநிலையில், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார், கடந்த மக்களவை தேர்தலில் காங்., தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக அறிவிப்பு ராகுலை தொடர்ந்து காங்கிரசில் மூத்த தலைவர் ஒருவர் பதவி விலகி உள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harish rawat resign his post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->