கனிமொழி ட்வீட் ஒரு பொய் மொழி! பழைய ஆதாரத்துடன் வந்த ஹெச்.ராஜா!  - Seithipunal
Seithipunal


விமான நிலையத்தில் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை இந்தியரா என கேள்வி எழுப்பியது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் பொய்யானது என்கிறார் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா. 

கனிமொழி எம்பி தனது அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்த அவர், "இன்று விமான நிலையத்தில் எனக்கு இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் இந்தியர்தானே என திரும்ப கேட்டார். இந்தி பேசினால்தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்று பதிவிட்டு கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில். தி.மு.க. எம்.பி கனிமொழி புகார் தொடர்பாக சி.ஐ.எஸ்.எப். அதிகாரியிடம் விசாரணை நடத்த சி.ஐ.எஸ்.எப். உத்தரவிட்டுள்ளது. மேலும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் யாரிடமும் மொழி தொடர்பாக கேட்பதுமில்லை என சி.ஐ.எஸ்.எப். தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கனிமொழியின் பயண விவரங்களை சி.ஐ.எஸ்.எப். கோரியுள்ளது.  நேற்று கனிமொழி புகார் அளித்திருந்த நிலையில் விசாரணை நடத்த  சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த விவகாரம் பொய்யானது என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கனிமொழி அவர்களின் ட்வீட் ஒரு பொய் மொழி. ஏனெனில் திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது இந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி அவர்கள். எனவே அவருக்கு இந்தி தெரியாது என்று பொய்யுரைத்துள்ளது போல் சம்பவமே மலிவான மொழி சர்ச்சையே என்பது தெளிவு" என பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja tweet about kanimozhi MP airport experience


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->