திமுக கூட்டணி கும்பலை வேரோடு வீழ்த்துவோம்!! அனல் பறக்கும் எச்.ராஜா டிவிட்!!! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், என்ஆர் காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டது, இதை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அவர் மத்திய அரசு விழாவிலும் கூட்டணிக் கட்சியான அதிமுக ஏற்பாடு செய்துள்ள கூட்டணி விழாவிலும் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி சமீபத்தில் தமிழகத்திற்கு மட்டும் 4 முறை பிரச்சாரத்துக்காக வந்துள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம், #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகும். 

இந்நிலையில், #GoBackModi என்ற ஹேஷ்டேக் இன்றும் டிரெண்டாகி வருகிறது. இந்த டிரெண்ட் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தவை,

"மோடி கோ பேக் " தமிழக கோஷம் அல்ல என்கிற உண்மையை தமிழகத்தில் எங்கு சென்றாலும் உணர முடியும். நாம் யோசிக்க வேண்டிய விஷயம் இந்த அந்நியச் சக்திகளுடன் திமுக கூட்டணியினர் கைகோர்த்துள்ளது தான். இந்தத் தேர்தலில் இக்கும்பலை வேரோடு வீழ்த்துவதுதான். என்று பதிவு செய்துள்ளார்.
 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja tweet about go back modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->