"திராவிடியன் ஸ்டாக் என்றால் மானங்கெட்டவர்கள்" படு மோசமாக திமுகவை வறுத்தெடுத்த ஹெச்.ராஜா.!  - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாமல் இருந்தது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவை சேர்ந்த அண்ணாமலை, எச்.ராஜா மற்றும் எல்.முருகன் உள்ளிட்டோர் கடுமையாக ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இத்தகைய சூழலில், கோவை பூ மார்க்கெட் பகுதியில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அதில், பாஜக தேசிய உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது, "கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பண்டிகைக்கு வாழ்த்து கூறும் திமுக, திராவிட மாடல் இந்துக்களின் பண்டிகையை மட்டும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஊர்வலத்தில் கூடினோம், பேசினோம், கலைந்தோம் என்று மட்டும் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருப்பதை உணர வேண்டும். 

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா வைரஸால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடியாமல் போனது. சீன வைரஸ் மட்டுமல்லாமல் பட்டாசுகள், பொம்மைகள் எல்லாமே சீனா உற்பத்தி செய்ததுதான். சீனா உற்பத்தி செய்து அனுப்பிய கம்யூனிஸ்ட் கட்சி வரை எல்லாமே தரமற்றதாக தான் இருக்கிறது. கம்யூனிசம் என்றாலே மக்களை கஷ்டத்தில் தள்ளுவது தான்.

'கனல் கண்ணன் இனிமேல்தான்டா உள்ளது' என்று கூறியுள்ளார். அவரை கைது செய்பவர்கள் வெட்கம் கெட்டவர்கள். திராவிடர்களின் கருத்து திருட்டுத்தனம் தான். திராவிடர்கள் என்றால் திருடர்கள். ஈவேரா கண்டுபிடித்தது நாத்திகம் இல்லை. திராவிடியன் ஸ்டாக் என்றால் மானங்கெட்டவர்கள் என்று பொருள்." என படுமோசமாக விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Raja scolding about Dravidian stock


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->