ஸ்டாலின் உங்களை அடிக்க மாட்டேன்.. ஆனால் இதை செய்வோம்.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்.! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த காலை திமுகவினரின் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது தமிழகத்துக்கு நல்லாட்சி விருது அளித்தவர்களை அடிக்க வேண்டும் என கூறியிருந்தார். இது பாஜகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தொடந்து வன்முறையை தூண்டும் விதத்தில், கலவத்தை தூண்டும் விதத்தில் பேசிவருகிறார். 

மேலும் நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என கூறியிருப்பது, வன்முறையைத் தூண்டுவது போல் உள்ளது. அதனால் தான் வில்சன் படுகொலை போன்றவை நடந்தது. நான் உங்களை அடிப்பேன் என்று சொல்லமாட்டேன். அதுபோன்ற மோசமான வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். ஆனால் நிச்சயம் திமுகவுக்கு பாஜக தக்க பதிலடி கொடுக்கும் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja says about mk stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->