சரக்கு மிடுக்கு.. என்ன லேசுப்பட்டதா..?! - டிவிட்டரில் திருமாவை பங்கம் செய்த எச்.ராஜா.!  - Seithipunal
Seithipunal


CAAவுக்கு எதிரான போராட்டமாக திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், "நீதி என்பது பட்டியலினத்தவர்களுக்காக யாரும் போட்ட பிச்சை இல்லை. அது சட்டரீதியாக அளிக்கப்பட்ட உரிமை." என்று அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், "அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலின் முடிவை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும்." என்று தெரிவித்துள்ளார். 

மேலும், "70 வயது வரை நடித்து முடித்தவர்கள் எல்லாம் அரசியல் செய்து ஆட்சிக்கு வர ஆசை கொள்கின்றனர். 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சிக்கு வருவதில் தவறு ஏதாவது இருக்கின்றதா.?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில், "இவர் என்ன சாதாரண நபரா? சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர். டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய மாவீரர். எல்லாம் தமிழகத்தின் தலைவிதி.." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H raja replied thirumavalavan speech about rajini


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->