காதலையும் தடை செய்துடலாமா..?! ஹெச்.ராஜா கேள்வியால் செய்தியாளர்கள் திகைப்பு.!  - Seithipunal
Seithipunal


நீட் தேர்வால் தற்கொலைனு அத தடை செஞ்சா, காதல் தோல்வியால தற்கொலைனு காதலையும் தடை செய்வாங்களா? என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

பாஜகவின் தேசிய செயலர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை மதுரையில் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கின்றார். 

அப்போது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்து பேசிய எச்.ராஜா, "பிரதமர் மோடியின் பிறந்தநாளில் 10 ஆயிரம் திமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள் பாஜகவில் இணைய இருக்கின்றனர். அத்துடன் பாஜக டெல்லியில் மட்டுமல்ல.. தமிழ்நாட்டிலும் நாங்க ராஜா தான்." என்று கூறினார். 

மேலும், செய்தியாளர்கள் நீட்டுக்கு தடை கோரி போராட்டங்கள் மற்றும் தற்கொலை நடப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, நீட் தேர்வால் தற்கொலை என்றால், அதை தடை செய்ய வேண்டுமானால் காதல் தோல்வியால பலரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதனால் காதலையும் தடை செய்வார்களா?: என கேள்வி எழுப்பியது அவர்கள் மத்தியில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja pressmeet about love


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->