தமிழக அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு., 'கன்னத்தில் வலுவான அறை' தான் உயர்நீதிமன்ற தீர்ப்பு.! சொன்னது யார் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


முதுகளத்தூர் மணிகண்டன் மரணம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து மாரிதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட கருத்துக்களுக்காக போலீசார் அவரை கைது செய்தனர். 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜகவினர் போராட்டத்தில் இறங்கினர். மேலும், அவரை கைது செய்ய விடாமல் தடுக்கவும் முற்பட்டனர். இருப்பினும் அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 505 (1)(2), 124ஏ, 504,153ஏ பிரிவுகளில் வழக்குப் பதிந்தது செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற கிளை அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற கிளையின் இந்த தீர்ப்புக்கு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவரின் பதிவில், "கருத்துரிமைக்கு எதிராக தமிழக அரசு எடுத்த சர்வாதிகார நடவடிக்கைக்கு கன்னத்தில் வலுவான அறை உயர்நீதிமன்ற தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன்" என்று எச் ராஜா தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h rafa saj about maridhass case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->