காங்கிரஸ் எம்எல்ஏ., கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம், சோஜித்ரா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ பூனம்பாய் பர்மாரின் மருமகன் கேதன் பதியார், ஆனந்த் நகரத்தை தாராபூருடன் இணைக்கு மாநில நெடுஞ்சாலையில் கார் ஓட்டிச் சென்றபோது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த பதியார் தற்போது அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சோஜித்ரா காவல் நிலைய துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜித் ராஜ்ஜியன்  தெரிவித்துள்ளதாவது, 

"பதியார் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதும் கைது செய்யப்படுவார். இதனை தொடர்ந்து அவர் கார் ஓட்டும் போது குடிபோதையில் இருந்தாரா என்பதை பரிசோதிக்க இரத்த மாதிரிகளைப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரும் சோஜித்ரா மற்றும் போரியாவி கிராமங்களை சேர்ந்தவர்கள். விபத்திற்கு பிறகு வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு பதியார் தப்பிச் சென்றார். ஆனால் அவர் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்". என்று அவர் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat congress mla car accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->