அரசின் இலவச மிதிவண்டியில் முதல்வர் படத்திற்கு பதில் என்ன இடம்பெற்றுள்ளது. ?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்

 நுங்கம்பாக்கத்தில் இருக்கும் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்த நிலையில் மாநிலத்தில் உள்ள பிற பள்ளிகளிலும் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டுள்ள மிதிவண்டிகள் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

முதல் கட்டமாக 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வருடம் அடர் நீல நிறத்தில் சைக்கிள்கள் வழங்கப்பட இருக்கின்றன. எப்பொழுதும் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டால் அதில் முதல்வரின் புகைப்படம் இடம் பெறும்.

ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசின் சின்னம் மற்றும் மிதிவண்டிகள் இயக்க தேவைப்படும் பயன்பாடுகள் குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு புதுவிதமான மாற்றம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மா சுப்பிரமணியன் மற்றும் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt Logo on free Cycle


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->