அவமானம் என்று எடுத்துரைத்த நெட்டிசன் - உடனடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்த ஆளுநர் தமிழிசை.! - Seithipunal
Seithipunal


"புதுச்சேரியின் அடையாளச் சின்னமான பாரதி பூங்காவில் உள்ள ஆயிமண்டபம் அருகே குவிந்துள்ள குப்பைகள் நகராட்சி நிர்வாகத்தின அலட்சியம். வரலாற்றுச் சின்னத்திற்கு அவமானம்" என்று, தனிநபர் ஒருவர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனை பார்த்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உடனடியாக தூய்மை பணியாளர்களை அனுப்பி, பூங்காவை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். 

மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

"பாரதி பூங்கா சுத்தம் செய்யப்பட்டுள்ளது. சுத்தம் செய்த மாநகராட்சி பணியாளர்களுக்கு நன்றி. இதனை கவனத்திற்கு கொண்டு வந்த சகோதரருக்கு நன்றி...

தூய்மை புதுச்சேரிதான் எனது வேண்டுகோள். ஆகவே, பொது இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்". என்று குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor tamilisai action to twitter report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->