தமிழக பாஜக தலைவராக போகும் ஜி.கே.வாசன்? அடுத்தடுத்து அடித்த அதிஷ்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 6 ராஜ்யசபா எம்பிகளின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. தற்போது இதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திமுக தங்கள் சார்பாக 3 வேட்பாளர்களை அறிவித்தது. 

அதை தொடர்ந்து அதிமுக சார்பில் நேற்று மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதிமுகவை சேர்ந்த இரண்டு வேட்பாளர்களும், கூட்டணி கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டை ஒதுக்கியுள்ளனர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். 

அதிமுகவில் கூட்டணி வைத்துள்ள தேமுதிக தங்களுக்கு ஒரு எம்பி சீட்டை ஒதுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், அதிமுக தலைமைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன், பாஜக மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்து எம்பி சீட்டை பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்பி ஆனதும், மத்திய அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஆகவில்லை என்றால் தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்வர் என கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan will be next tamilnadu bjp leader


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->