மத்திய அரசிடம் முக்கிய கோரிக்கை வைத்து ஜி கே வாசன்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டு ஹஜ் பயணிகள் வழக்கம் போல சென்னை விமான நிலையத்தில் இருந்து புனிதப் பயணம் மேற்கொள்ளும் முறையே தொடர விரும்புவதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமாகா தலைவர் ஜிகே வாசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் புனிதப் பயணமாக மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரைக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து செல்வதையே விருப்பமாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் புனிதப் பயணம் செய்பவர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் செய்வது வழக்கமாக இருந்தது.

ஆனால் தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் புனிதப் பயணம் செய்வதற்கு, விமானத்தில் செல்ல கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசின் ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பை தமிழ் நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் ஏற்க விரும்பவில்லை. காரணம் தமிழ்நாட்டில் இருந்து கொச்சி விமானம் நிலையம் செல்வதற்கு கால நேரம் அதிகமாவதோடு, தேவையற்ற பொருளாதாரப் பிரச்சனையும் ஏற்படும்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, புதுவை மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து சுமார் 4,500 ஹஜ் பயணிகள் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

எனவே மத்திய அரசு தமிழ்நாட்டு ஹஜ் பயணிகளின் கோரிக்கையான கடந்த காலத்தைப் போலவே 2022 ஆம் ஆண்டிலும் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹஜ் பயணம் செய்யும் முறையே தொடர விரும்புவதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasam statement on nov 12


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->