கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்த பாமக மாநில தலைவர் ஜி.கே. மணி.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறி வருகிறார். இருந்த போதிலும் இதுவரை காட்சி ஆரம்பித்ததாக தெரியவில்லை. வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குள் கட்சியை ஆரம்பிக்க ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதை தொடர்ந்து ரஜினியின் அரசியல் ஆலோசகர் என கூறப்படும் தமிழருவி மணியன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாமக, ரஜினிகாந்துடன் கூட்டணி வைக்கும் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாமக மாநில தலைவர் ஜிகே மணி தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜிகே மணி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் மற்றும் ஹைடிராகார்பன் வராது என்ற அறிவிப்புகளை வரவேற்பதாக கூறினார். மேலும் தமிழக முதலமைச்சர் அதனை சட்டமாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறாது எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk mani says alliance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->