அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.! மரு.இராமதாசு வேண்டுகோள்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவு பெற்ற நிலையில்., இன்று தேர்தல் வாக்குபதிவிற்கான நாள் ஆகும். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு., காலை சுமார் 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டு மாலை சுமார் 6 மணிவரை வாக்குப்பதிவானது நடைபெறும். வாக்குசாவடி மையத்திற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட காவல் துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் என்று பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

காலை முதலாகவே வாக்குகளை அளிக்க இளம் வாக்காளர்கள்., மக்கள்., திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அந்தந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்து தங்களின் வாக்குகளை செலுத்தி வரும் நிலையில்., விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நிறுவனர் மரு.இராமதாசு தனது குடும்பத்தாருடன் வந்து வாக்குகளை பதிவு செய்தார். 

இதனைப்போன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தாருடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மரு.இராமதாசு தேர்தலில் மக்கள் அனைவரும் கட்டாயம் வந்து அவர்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணியானது அணைத்து மக்களவை தொகுதிகளிலும் அமோகமான வெற்றியை பெரும் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

give vote all people dr.ramadoss speech after done his vote


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->