திரௌபதி படத்தை வைத்து ஒரே ட்விட்டில் விசிக-வை பங்கப்படுத்திய காயத்ரி ரகுராம்.! - Seithipunal
Seithipunal


பழைய வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து, இயக்குனர் மோகன் ஜி இயக்கிய படம் திரௌபதி. இந்த படத்தில் நடிகர் ரிசார்ட் ரிஷி கதாநாயகனாக, நடிகை ஷீலா கதாநாயகியாகவும் நடித்துள்ளார். பல எதிர்ப்புகள், விமர்சனங்கள் எல்லாம் தாண்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான இந்த படத்திற்கு தற்போது வரையிலும் திரையரங்குகளில் கூட்டம் நிறைந்து வருகிறது. இந்த படம் வெளிவந்தது முதல் தற்போதுவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் வெளியான 3 நாட்களில் 6 கோடியை தாண்டி அதிகமாக வசூலித்துள்ளது. போலி திருமணம், நாடக காதல் போன்ற உண்மை நிலவரங்களை மையமாக வைத்து மக்களுக்கு அப்படியே எடுத்துக் காட்டியுள்ளார் இயக்குனர். இதுவே படத்தை பார்த்த ரசிகர்களின் ஒருமித்த விமர்சனமாகவும் உள்ளது. திரௌபதி சாதி படம் என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டிருந்தாலும், சாதியை  தாண்டிய சமூகத்திற்கான படமாகவே இப்படம் அமைந்துள்ளது. அனைத்து மக்களும் கொண்டாடும் படமாக திரௌபதி இருக்கிறது.

இந்த நிலையில், பாமகவின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், திரௌபதி படம் குறித்து பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று திரௌபதி படத்தை பார்க்க வேண்டும் கூறியிருந்தார். 

இந்த நிலையில், சேலம் மாவட்டதிலுள்ள ஓமலூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திரெளபதி திரைபடத்தை தடை செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்துகொண்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

திரெளபதி திரைபடத்தை தடை செய்யக்கோரி விசிகவினர் நடத்திய போராட்டம் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் "குற்ற உணர்வு" (Guilty)என கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gayathri raghuram tweet about vck party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->