பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டி?! ரஜினி ஆதரவு?! பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டப்படுகிறது. பொங்கலை சிறப்பிக்கும் விதமாக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் “நம்ம ஊரு பொங்கல்” நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு, விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் “நம்ம ஊரு பொங்கல்” நடைபெற்றது. இந்த விழாவில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கவுதமி கலந்துகொண்டு பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், "தமிழகத்தில் பாஜக நல்ல ஒரு வளர்ச்சியை கண்டுள்ளது. தேர்தலில் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒற்றுமையாக இலக்கை அடைய வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் நான் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவது பற்றி தற்போது கருத்துக்கள் எதுவும் இல்லை.

பாஜக-வுக்கு யார் முதுகிலும் சவாரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நடிகர் ரஜினிகாந்த பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்ய வேண்டும்" என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GAUTHAMI BJP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->