யாரும் கவனிக்காத ஒரு விவகாரத்தை கையில் எடுத்த ஜிகே வாசன்.! - Seithipunal
Seithipunal


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது,

"மத்திய அரசால் கொடுக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது. ஏன் அதனை தமிழில் வெளியிடவில்லை. அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கடமை மத்திய கல்விக் கொள்கைக்கு உண்டு.

புதிய கல்விக் கொள்கையை உடனடியாக தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டு மத்திய அரசு எப்பொழுதும் தமிழ் மொழிக்கு உறுதுணையாக இருக்கிறது என்று வெளிப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற நிலை எதிர்காலத்தில் எந்த முக்கிய பிரச்சனையிலும் ஏற்படாது இருக்க 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும், இந்தியா வின் அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

g k vasan say about new education policy in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->