பாமகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ! டாக்டர் ராமதாசுடன் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் போரூர் சண்முகம், பாட்டாளி மக்கள் கட்சியில் தனது குடும்பத்தினருடன் இணைத்து கொண்டார். 

2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், இடம் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் போரூர் சண்முகம். பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சண்முகம் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் கட்சியிலிருந்து விலகினார். 

இந்த நிலையில் மீண்டும் தனது குடும்பத்தினருடன் இன்று மருத்துவர் ராமதாசை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கனவே கட்சியிலிருந்து விலகி இருந்த பேராசிரியர் தீரன் மீண்டும் கட்சியில் இணைந்தது போல, சண்முகமும் இணைத்துக் கொண்டுள்ளது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

former pmk mla porur shanmugam rejoin pmk infront of dr ramadoss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->