ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி எடுத்த அதிர்ச்சியான முடிவு! - Seithipunal
Seithipunal


இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு இன்று வந்திருக்கும் நிலையில், நாளை (பிப்ரவரி 25) மாலை டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் சார்பில், விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க, எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த நிலையில் இந்த விருந்தில்  தாங்கள் கலந்து கொள்ள போவதில்லை என இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் அறிவித்துள்ளார்கள். 

முதல்முறையாக அமெரிக்க அதிபர் ஒருவர் இந்தியாவிற்கு குடும்பத்துடன் வருகை தந்துள்ள நிலையில், குடியரசுத்தலைவர் அளிக்கும் இந்த விருந்தினை நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former PM Manmohan Singh and Ghulam Nabi Azad will not attend the dinner banquet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->