திமுகவின் முக்கிய தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நபர் காலமானார்.!! - Seithipunal
Seithipunal


திமுகவின் முன்னாள் திமுக எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

 நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம். இவர் நாகை தெற்கு மாவட்ட திமுக தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. 

அதையடுத்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் மீனாட்சிசுந்தரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் மூன்று முறை வேதாரண்யம் எம்எல்ஏவாக இருந்துள்ளார். 

இவருக்கு திமுக சார்பில் செப்டம்பர் 15ம் தேதி பெரியார் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இவர் உயிரிழந்திருப்பது திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

former dmk mla meenakshi sundaram passed away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->