பாஜகவில் ஐக்கியமானார் திமுக முன்னாள் அமைச்சரின் மருமகன்.. வாழ்த்து தெரிவித்த H. ராஜா.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் கட்சி நிர்வாகிகள் கட்சி மாறுவது வழக்கமாக மாறியுள்ளது. கடந்த சில வாரங்களாக திமுக நிர்வாகிகள் கட்சி மாறுவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம், சமீபத்தில் பாஜகவில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மேலும் சில திமுக எம்எம்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல, அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்ற நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறிவருகின்றனர். 

வரும் 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள சூழ்நிலையில் கட்சி விட்டு கட்சி தாவும் நிர்வாகிகளால் தமிழகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனின் மருமகன் புவியரசு என்பவர் பாஜகவில் இணைந்துள்ளார். 

புவியரசு பாஜகவில் இணைந்ததை, பாஜக மாநில தேசிய செயலாளர் H. ராஜா டுவிட்டரில் பதிவிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு தேர்தலை எதிகொள்ள, பதவி ஆசை காட்டி அரசியல் பிரமுகர்களை பாஜக தன் பக்கம் இழுப்பதாக  திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றனர். மேலும், திமுகவில் உள்ள குடும்ப அரசியல் பிடிக்காமலே பலர் வேறு கட்சியில் இணைவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

former dmk minister son in law join bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->