திமுகவில் இருந்த முன்னாள் எம் எல் ஏ! திடீரெனெ அதிமுகவில் இணைந்தார்! கடும் அதிருப்தியில் திமுக!  - Seithipunal
Seithipunal


திமுகவை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட அவைத் தலைவரும், விளாத்திகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.கே.பெருமாள், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் வரதராஜ பெருமாள் ஆகியோர் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரையும் நேரில் சந்தித்து, தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். 

அதிமுகவில் இணைந்த என்.கே.பெருமாள் தி.மு.க-வில் இருந்திருந்தாலும், அவர் தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசி. இதே தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏவாக கடந்த 2001 – 2006 வரை இருந்தவர். அ.தி.மு.கவில் வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். மேலும் தொகுதியின் தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏவான சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏவான மார்கண்டேயன் ஆகிய இருவரும் இவரின் அரசியல் சீடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

விளாத்திகுளம் தொகுதியைப் பொறுத்தவரையில் தி.மு.க-வில் இருந்தால் எப்போதும் முன்னேற முடியாது என நிர்வாகிகள் உணர்ந்து அ.தி.மு.க-வில் இணைய முடிவு செய்துள்ளதால் தி.மு.க வலுவிழந்துள்ளது.  விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தற்போதுவரை நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளது. இங்கு தி.மு.க-வின் செல்வாக்கு குறைவுதான். அதேசமயம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் மூத்தவர்களை மதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 

2006 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ சீட் எதிர்பார்த்து கிடைக்காததால் விரக்தியின் காரணமாக அ.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த பெருமாளுக்கு தி.மு.க-வில் மாவட்ட அவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டதால் அதிருப்தியில் அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டார் என கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former ADMK MLA rejoin ADMK from DMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->