பரபரப்பு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு.!! அதிரும் இந்திய அரசியல் களம்.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு இருப்பது இந்திய அரசியல் களத்தை அதிர வைத்துக்குள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது, அசாம் மாநிலம், மோரிகான் மாவட்ட காவல்துறையினர் தேசத் துரோக வழக்கு பதிவு செய்யதுள்ளனர்.

கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், இந்திய துணை இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை, மரியாதையாக 'மசூத் அசார்ஜி' என்று அழைத்ததால், ராகுல் காந்தி மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம், மோரிகான் மாவட்ட காவல் நிலையத்தில், ஆர்டிஐ ஆர்வலர் ராஜு மகாந்தா என்பவர் அளித்த புகாரில், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை, 'மசூத் அசார்ஜி என்று ராகுல் காந்தி மரியாதையுடன் அழைத்தது, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு. 

எனவே, ராகுல் காந்தி மீது தேச விரோத வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் பிரதிப் நாத், முதல் தகவல் அறிக்கையை ராகுல் காந்தி மீது பதிவு செய்துள்ளார். விரைவில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FIR AGAINST RAHUL GANTHI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->