போக்குவரத்து விதிமுறைகளை மீறிய எம்.எல்.ஏ-வுக்கு அபராதம் விதித்து காவல் துறை அதிரடி!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஆனந்த நாராயண் ஜெனா, இவர் மத்திய புவனேஷ்வர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்தநிலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் நாராயண் ஜெனா அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது, சட்டமன்ற உறுப்பினரின் கார் நோ பார்கிங் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த எம்எல்ஏ ஆனந்த நாராயண், தனது ஓட்டுநர் காரை விதிகளை மீறி நோ பார்கிங் இடத்தில் நிறுத்திவிட்டதாகவும், சட்டத்திற்கு முன் நான் உள்ளிட்ட அனைவரும் சமம் தான் என்றும் அனைவரும் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fine for mla


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->