கொரோனாவை எதிர்கொள்ள நிதி! அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! அதிகபட்சமாக தமிழகத்திற்கு ஒதுக்கீடு! - Seithipunal
Seithipunal


கொரோனா ரிங்ஸ் பரவலை தடுப்பதற்காக 6 மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புக்கான நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  

ஆந்திர பிரதேசம் அருணாச்சல பிரதேசம் மேகாலயா நாகாலாந்து ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கக்கூடிய நிதியை, கொரோனவை எதிர்கொள்ள ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

மொத்தமாக 2570 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டதில் 940 கோடி ரூபாய் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 1629 கோடி ரூபாய் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  அந்தந்த மாநில அரசுகளுக்கு இந்த தொகையானது அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு முதல்கட்டமாக 987.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திரப் பிரதேசத்தில் 870 கோடி ரூபாய் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இவை இயல்பாக மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கக்கூடிய நிதியா அல்லது கொரோனவிற்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியா என்ற விவரங்கள் முழுமையாக இல்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Finance minister Nirmala sithraman announced local urban local bodies funds


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->