பதவி பறிபோகப்போகும் பயத்தில் அதிமுக எம்எல்ஏக்கள்.? அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக இரண்டாக உடைந்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, தற்பொழுது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பின்போது, ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கானது மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கானது தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என நீதிமன்றம் உத்தரவிட, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்த விசாரணையை விரைவில் நடத்த வேண்டும் என மேல்முறையீடு செய்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழங்கி சபாநாயகரின் செயலாளர் விளக்கம் தர உத்தரவிட்டுருந்த நிலையில் நாளை மறுநாள் (14.02.2020) வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இதனால் அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

February 14 ops case hearing


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->