மத்திய அரசுக்கு கெடு விதித்த., டெல்லி விவசாயிகள்.!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லி எல்லை பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து 73 நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர். 

இந்த வேளாண் சட்டங்கள் தங்களுக்கு எதிரானவை என்ற கருத்து வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. விவசாயிகள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, 'தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தி நிற்க வைத்து விடும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை ரத்தாகும்" என்று விவசாயிகள் தெரிவிக்கின்றன.

புதிய மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி, வேளாண் அமைச்சர் பல்வேறு விளக்கங்களையும், 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை விடாமல் தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்து, தேசிய கோடி அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விவசாய சங்கங்கள் தங்களின் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளன.

விவசாயிகளின் இந்த தொடர் போராட்டத்திற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பில் இது எங்கள் ஒரு நாட்டு பிரச்சனை. நீங்கள் தலையிட கூடாது என்று இந்திய பிரபலங்களும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய அக்டோபர் 2 ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளித்துள்ளதாக பாரதிய கிசான் யூனியன் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 2ம் தேதிக்கு பின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைத்து விவசாயிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmers vs central govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->