ஸ்டாலினுக்கு பறந்த அழைப்பு.. டெல்லிக்கு புறப்படப்போகும் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்திற்கு கெயில், பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர் மின் கோபுரங்களால் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

உயர் மின் கோபுரம் கொண்டு செல்லும் திட்டத்தை விவசாயிகள் எதிர்க்க வில்லை. விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைப்பதற்கு மட்டும் எதிர்த்து வருகின்றனர். சாலையோரத்தில் கேபிள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மாநில அரசு மறுத்து வருகின்றனர். 

உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கெயில், பாரத் பொட்ரோலியம் ஐடிபி எல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாய கூட்டமைப்பினர் சார்பில் டெல்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், திமுக தலைவர் மு க ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் போன்றவர்களை சந்திக்க நேரம் கேட்டு உள்ளனர். அவர்களை சந்தித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmers protest 3 days in delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->