தமிழகத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல்.! சற்றுமுன் வெளியான பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி இன்று சேலம், ஓமலூர் அருகே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

"இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இதுவரை திட்டமிட படவில்லை. தேர்தல் நடைபெறும் 9 மாவட்டத்தில் இருக்கின்ற கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம்.

கூட்டுறவு சங்கங்களில் உள்ளவர்கள் யாரும் கட்சி சார்பாக இல்லை. அவர்கள் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்கள். கூட்டுறவு சங்க வாக்கியில் முறைகேடு நடந்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்பது அனைத்து அரசுக்கும் பொருத்தமானதுதான்.

என்னுடைய ஆட்சிக்காலத்திலும் ஒரு சில கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்றது. அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல எங்கு நடந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவினர் கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்கள் எந்த கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்து உள்ளது என்பது குறித்த எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. பார்க்கலாம்..,

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை தனது தேர்தல் அறிக்கையை சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றியதாக இந்த ஒரு சரித்திரமும் இதுவரை இருந்தது கிடையாது. அவர்கள் சொல்வார்கள்., தேர்தல் வரை சொல்வார்கள்., தேர்தல் முடிந்த பிறகு அது அவ்வளவு தான். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்., செய்தாரா? அவர்கள் தேர்தலில் சொல்வதோடு சரி, செய்வது அவர்களின் வரலாற்றிலேயே கிடையாது.

நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக கொடுத்த வாக்குறுதியை நம்பி தமிழகம் முழுவதும் சுமார் 43 லட்சம் பேர் நகையை அடமானம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் தேர்தல் நேரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கூட நகை கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்கள். ஆனால் அதையெல்லாம் அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை. நம்பிய மக்கள் ஏமாற போகிறார்கள் அவ்வளவுதான்.

வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் 2024ம் ஆண்டு 'ஒரே தேர்தல் ஒரே நாடு' என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக வருகின்ற 2004ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுடன், தமிழகத்திலும் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. 

தற்போது கட்டப்பட்டு கொண்டிருக்கும் பாராளுமன்ற வளாகம் ஆயிரம் இருக்கைகள் கொண்ட வளாகமாக கட்டப்பட்டு வருகிறது. அதனால், நாடு முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அந்த வகையில் வருகின்ற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலும் நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ளது." என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EXCM EPS say about 2024 election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->