செய்தி ஊடகங்கள் திமுகவுக்கு 'ஜால்ரா' அடித்து கொண்டு இருக்கிறது - இபிஎஸ் காட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி இன்று சேலம், ஓமலூர் அருகே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

"கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்., செய்தாரா? அவர்கள் தேர்தலில் சொல்வதோடு சரி, செய்வது அவர்களின் வரலாற்றிலேயே கிடையாது.

நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக கொடுத்த வாக்குறுதியை நம்பி தமிழகம் முழுவதும் சுமார் 43 லட்சம் பேர் நகையை அடமானம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் தேர்தல் நேரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கூட நகை கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்கள். ஆனால் அதையெல்லாம் அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை. நம்பிய மக்கள் ஏமாற போகிறார்கள் அவ்வளவுதான்.

வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் 2024ம் ஆண்டு 'ஒரே தேர்தல் ஒரே நாடு' என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக வருகின்ற 2004ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுடன், தமிழகத்திலும் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. 

தற்போது கட்டப்பட்டு கொண்டிருக்கும் பாராளுமன்ற வளாகம் ஆயிரம் இருக்கைகள் கொண்ட வளாகமாக கட்டப்பட்டு வருகிறது. அதனால், நாடு முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அந்த வகையில் வருகின்ற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலும் நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ளது." என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு என் தலைமையிலான அரசு வழங்கியது. அதை அப்படியே காப்பி எடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், அரசு பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இட ஒதுக்கீடு வழங்கி உள்ளார். இது வரவேற்கத்தக்க விஷயம் தான். அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் அனைத்து திட்டங்களையும் நாங்கள் வரவேற்போம்." என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய ஒரு கேள்விக்கு பதிலளித்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி, " ஊடகங்கள் தற்போது நடுநிலையாக செயல்படுவதில்லை. அனைத்து ஊடகங்களும் ஆளும் திமுக அரசுக்கு 'ஜால்ரா' அடித்து கொண்டு தான் இருக்கின்றார்கள்" என்று காட்டமாக தனது பதிலை தெரிவித்தார்.

நல்லவேளை திமுக எம்பி ஆர்எஸ் பாரதி போல் சொல்லாமல் போனாரே., 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EXCM EPS reply to news media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->