அதிமுக முன்னாள் எம்எல்ஏ அதிமுகவில் இருந்து விலகல்.! அதிர்ச்சியில் அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை மற்றும் மாநிலங்களவை சில நாட்கள் முன்பு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவாக வாக்களித்ததால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இச்சட்டத்திற்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு, அதிமுக எம்பிக்கள் வாக்களித்ததை கண்டித்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏ நயினா முகமது அக்கட்சியில் இருந்து விகியுள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சில விலக உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex mla distortion from admk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->