திமுகவின் 23 அமைச்சர்கள் : நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்கள் தானா சொல்லுங்கள்?! - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், 

"திமுக அரசு ஒரு பழிவாங்கும் நடவடிக்கையில் தான் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறது. நீதிமன்றம் ஒன்று இருக்கிறது. நிச்சயமாக நீதிமன்றம் சென்று எங்கள் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.

இந்த அறப்போர் இயக்கம் என்பது திமுகவின் உற்றத் துணையாக இருக்கக் கூடிய ஒரு இயக்கம் தான். திமுக அரசு ஒரு நடவடிக்கை எடுக்கும்போது, அந்த இயக்கத்துடன் கைகோர்த்துக்கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினால்., இது நாங்கள் எடுத்த நடவடிக்கை இல்லை. எங்களுக்கு வந்த புகாரின் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம் என்று ஒரு சாக்கு சொல்வதற்கு வசதியாக சிலரை கையில் வைத்துக்கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இது ஜனநாயகத்துக்கு மாறான ஒரு செயல்/

இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் பழிவாங்கும் செயல். திமுக ஆட்சிக்கு வர 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்தனர். ஆனால், அதை எதையும் நிறைவேற்ற முடியாத காரணத்தினால், மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, குறிப்பாக இந்த தேர்தலில் அதிமுகவினர் பணி செய்ய விடாமல் ஒரு முடக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இவர்களின் எந்த ஒரு மிரட்டலுக்கும், இந்த வருமானவரி சோதனைகளுக்கும் அதிமுக அஞ்சப்போவதில்லை. இவ்வளவு சோதனைகளை கடந்து தான் இந்த அதிமுக கழகம் வளர்ந்து நிற்கிறது. 

சோதனைகளை சாதனையாக மாற்றக் கூடிய ஒரு இயக்கம் தான் அதிமுக இயக்கம். கட்சி முடக்கி விடலாம், அதிமுகவின் தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தி விடலாம் என்று திமுக நினைத்தால், 'பூனைக்கண் மூடிவிட்டால் பூலோகம் இருண்டுவிடும்' என்று திமுகவினர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எத்தனை சோதனை வந்தாலும், அத்தனையும் கடந்து மாபெரும் இயக்கமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நிலைத்து நிற்கும். நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்கள் தானா சொல்லுங்கள்? என்று சொல்வது போல் திமுக அமைச்சர்கள் 23 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை இந்த இடத்தில சொல்லி கொள்ள விரும்பறேன்" என்று அமைச்சர் ஜெயக்குமார் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister jeyakumar say abot kcv raid


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->