ஸ்டாலின் கொண்டுவந்த நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு., எடப்பாடி கே பழனிச்சாமி பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கிய உடன், அதிமுக உறுப்பினர்கள் நீட் தேர்வுக்கு மாணவன் தனுஷ் பலியானதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியர்களை சந்தித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவிக்கையில், 

"இன்று சட்டப்பேரவை நிகழ்ச்சி தொடங்கியவுடன் முக்கியமாக இரண்டு விவகாரம் குறித்து அவையின் கவனத்திற்கு நான் கொண்டு வந்தேன். ஒன்று வாணியம்பாடி இஸ்லாமிய சகோதரர் வசீம் அக்ரம் என்பவர், அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனகாரணமாக அவரை கூலிப்படையினர் கொடூரமாக கொலை செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கொலை குற்றவாளிகளை உடனடியாக பிடித்து கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என்று அவையின் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.

அதுமட்டுமில்லாமல் இரண்டாவதாக அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியை வழங்க வேண்டும் என்றும், அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன்.

இரண்டாவதாக திராவிட முன்னேற்ற கழகம் தனது தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறியது. எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் 'திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் வேலை நீட் ரத்து செய்யப்படும்' என்று தெரிவித்தார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

அதோடு மட்டுமில்லாமல் நீட் தேர்வு குறித்த எந்த ஒரு தெளிவான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்துக்கு உள்ளாகினர். ஆளுநர் உரையின் போது நேரடியாக முதலமைச்சரிடம் நான் கேள்வி கேட்டேன், இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? மாணவர்கள், பெற்றோர்கள் குழப்ப நிலையில் உள்ளனர். இதற்கு தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு முதலமைச்சர் மழுப்பலான ஒரு பதிலைத் தெரிவித்தார். அப்பொழுதும் தெளிவான முடிவை இந்த அரசு எடுக்கவில்லை.

இதன் காரணமாகவும், திமுக அரசின் வாக்குறுதியை நம்பியும் மாணவர்கள் குழப்பமான சூழ்நிலையில் நீட் தேர்வை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்ட காரணத்தினால், சேலம் மாவட்டம் தனுஷ் என்ற மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்டான். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். 

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் அவர் கட்சியை சேர்ந்தவரும் தொடர்ந்து ஊடகத்திலும், பத்திரிகைகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு முழுமையாக தயார்படுத்திக்கொள்ள முடியவில்லை. இதனால் அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். இதற்கு முழு பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் என்று, வெளிநடப்பு செய்தோம். நாங்கள் இன்று திமுக கொண்டுவரும் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்கும்.

நீட் தேர்வு குறித்து பல விவாதங்கள் நடைபெற்று இருக்கிறது. மாண்புமிகு அம்மாவுடைய அரசு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிறகு தேர்தல் வந்துவிட்டது. அப்படியே நிலுவையில் இருந்து விட்டது.

நாங்கள் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது திமுக எம்பி ஆ ராசா ஒரு கருத்தை தெரிவித்தார் அதை உங்களுக்கு காண்பிக்கிறேன் இது இன்றைய திமுகவின் இந்த தீர்மானத்துக்கு பொருந்துமா என்பதை நீங்களே கேட்டு கொள்ளுங்கள்., என்று ஆ ராசா பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் ஆ ராசா பேசியதாவது, ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிட்டாங்க., அப்புறம் என்ன 'இதுக்கு' (கெட்ட வார்த்தை எதை வேண்டுமானாலும் போட்டு கொள்ள கூடிய வார்த்தை இந்த 'இதுக்கு' என்ற வார்த்தை) நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர., இவர்கள் கொண்டுரு வரும் இந்த தீர்மானம் அயோக்கியத்தனம்" என்று அந்த ஆடியோவில் ஆ ராசா பேசுகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EX CM say about neet exam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->