பச்சோந்தி, அரசியல் அநாதை, வைகோவை புரட்டி எடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்! - Seithipunal
Seithipunal


அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலில் இருந்த சிறப்பு சட்டம் 370 ஐ ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் முதல் துரோகி, பாஜக இரண்டாவது  துரோகி என பகிரங்கமாக எதிர்த்தார். 

அவருடைய எதிர்ப்புக்கு இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே எஸ் அழகிரி, வைகோ நேரத்திற்கு ஏற்றாற்போல் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி என கடுமையாக விமர்சித்தார். மேலும் அவரை தொடர்ந்து முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், கள்ளத் தோணி நாயகர் என்ற பட்டத்தில் இருந்து தற்போது துரோகி நம்பர் ஒன் என்ற பட்டத்திற்கு வைகோ உயர்ந்துள்ளார் என விமர்சித்துள்ளார். 

தற்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் வைகோ காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் தயவால்தான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார் என்பதை மறந்து விட்டார் எனவும், பதவியேற்ற 15  நாட்களுக்குள் காங்கிரசுக்கு எதிராக பேசிவரும் அவர்தான் நம்பர் ஒன் துரோகி எனவும், அரசியல் அனாதையாக இருந்த அவரை திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்து அவருக்கு கணேசமூர்த்தி என்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினரும் வழங்கியது எங்கள் கூட்டணி தான் எனவும், அதை மறந்துவிட்டு தற்போது காங்கிரஸ் கட்சியை துரோகி என அவர் விமர்சனம் செய்வது நன்றாக இல்லை எனவும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVKS Elangovan says about Vaiko


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->