ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பிப்.3ல் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவித்தது முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியில் தீரன் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என முதலில் அறிவித்ததும் திமுக தான். பின்னர் காங்கிரஸ் தனது வேட்பாளரை முதலில் அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. இந்த நிலையில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கவுள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 3ஆம் தேதி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Evks Elangovan file his nomination on Feb3 for erode East


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->