திருடர்கள் கையில் ஜனநாயகம்! அனைவரும் ஓட்டு போட வாருங்கள்! - கமல்ஹாசன் - Seithipunal
Seithipunal


ஜனநாயகம் என நம்பிக் கொண்டிருக்கும் பலம்  திருடர்கள் கையில் தான் இருக்கும் - கமலஹாசன் கருத்து.

தேர்தல் வந்தால் மட்டுமே அரசியல் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன். டார்ச் லைட் எடுத்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் ஊழலை ஒழிப்பதையும் ஜனநாயகத்தையும் தேடுவதை வாடிக்கையாகக் கொண்டவர். தேர்தல் முடிந்ததும் படம் நடிப்பது பிக் பாஸில் தொகுத்து வழங்குவது என பிஸியாகி விடுவார்.

இந்நிலையில் திருச்சி நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமலஹாசன் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் அரசியல் என்பது கடமை, அது தொழில் அல்ல. ஓட்டு போடும் வயது வந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் கூட சேர்க்காமல் இளைய தலைமுறையினர் உள்ளனர்.

ஓட்டு போடுவது ஜனநாயக கடமை. அதை செய்யவில்லை என்றால் கேள்வி கேட்கும் அருகதை இல்லை. நாம் கடமையை செய்யாவிட்டால் ஜனநாயகம் என நம்பிக் கொண்டிருக்கும் பலம் திருடர்கள் கையில் தான் இருக்கும் என கமலஹாசன் பேசியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Everyone come to vote by Kamal Haasan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->