ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..  இதுவரை ரூ.11.36 லட்சம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடுகிறது. மேலும், தேமுதிக, நாம் தமிழர், அமமுக போன்ற இதர கட்சிகள் தனித்து போட்டியிடுகிறது.

இதில், தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் 2 பிரிவுகளாக பிளவுபட்டு தனித்தனியே போட்டியிடுகின்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினரால் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.11.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By-election Rs.11.36 lakh seized


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->