#BREAKING | நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து, வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 

அமமுக கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்த  டிடிவி தினகரன், அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் தேமுதிக சார்பாக ஆனந்த் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மேனகா போட்டியிட உள்ளதாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode by Election Naam Thamilar candidate menaka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->