பெரும் அதிர்ச்சியில் இபிஎஸ்.! ஆணையருக்கு பரபரப்பு கடிதம்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, இன்று முதல் வேட்புமனு தொடங்குகிறது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 6.10.2021, 9.10.2021 ஆகிய தேதிகளில்‌ இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனி குமாருக்கு, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், "தமிழ்நாட்டில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 கட்டம் என்பது தேவையற்றது. தமிழக சட்டமன்ற தேர்தலின் போது கூட 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாகத்தான் தேர்தல் நடத்தப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை மிகக்குறுகிய காலத்துக்குள் நடத்தப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சியையும், ஆட்சியில் இல்லாத மற்ற கட்சிகளையும் சாதகமற்ற நிலைக்கு கொண்டு சென்று விடும்.

வாக்காளர்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்க முடியும் என்ற சூழல் உள்ள நிலையில் சமூக விரோதிகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக ஒரேகட்டமாக தேர்தலை நடத்தவேண்டும். இந்த தேர்தலில் ஆளுங்கட்சி தேவையற்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் என்ற கவலை எங்களுக்கு உள்ளது." என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps write letter to election commission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->