முதல்வர் விசேஷ அக்கறை காட்டும் விஷயம்.! ஆர்வத்தில் ஜெ.தொண்டர்கள்.!   - Seithipunal
Seithipunal


ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேதா நிலையம் இல்லத்தை நினைவிடமாக மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உருவாக்கவும் அவசர சட்டத்தைப் பிறப்பித்து இருக்கின்றார். 

இந்த அறக்கட்டளைக்கு தலைவராக எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உறுப்பினர் செயலாளராகவும் அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். 

ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதில் முதல்வர் தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டி வருகின்றார். இதனை சிறப்பாக அமைக்க மிகுந்த முனைப்புடன் அவர் செயல்பட்டு வருகின்றார். மேலும், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன்-இடம் நினைவிடத்திற்கான கட்டமைப்பை உருவாக்கும் பணியை கொடுத்துள்ளார். 

அவரிடம் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்குள்ள நினைவிடங்களை பார்வையிட்டு வரச் சொல்லி இருக்கின்றார். நினைவிடத்திற்கு உள்ளே கண்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும் என்று அவர்கள் கூறியதையும் செய்யச் சொல்லி இருக்கின்றார். அத்துடன் ஐந்தாண்டுகள் வரை நினைவிடத்தை தொடர்ச்சியாக பராமரிக்கும் பணியை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps special caring about jayalalitha vedha illam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->