ஓபிஎஸ்சுக்கு அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்.! பியூஸ் கோயல் பதிலால்.. எடப்பாடி அதிரடி.!  - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அமைச்சர்களை முதல்வர் கூட கட்டுபடுத்தாத நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, அமைச்சர்கள் வரம்பு மீறி பேசக்கூடாது என்று எச்சரித்தது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தின் கூட்டணியை கையாண்டது பியூஷ் கோயல் தான். அந்த வகையில் எடப்பாடி தரப்பினர், தமிழக பாஜக தலைமையின் நடவடிக்கைகள் குறித்து பியூஸ் கோயிலுடன் பேசியுள்ளனர். 

அதற்கு பியூஸ் கோயல், "சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மாநில பாஜகவின் முடிவுகளை தேசிய தலைமை ஓரிரு திருத்தங்கள் செய்யும். ஆனால், அவர்களுடைய முடிவை முழுமையாக எதிர்க்க முடியாது. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். நீங்கள் ஒரு முடிவை எடுத்துக் கொள்ளுங்கள்." என்று எடப்பாடி தரப்பிடம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து எடப்பாடி தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், இனி அதிமுகவை விமர்சிக்கும் பாஜகவினர் யாராக இருந்தாலும் தரமான பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஏற்கனவே அதிமுக பாஜகவின் அடிமை என்று பேசப்பட்டு வரும் நிலையில் பாஜகவை எதிர்க்க எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதாம்.

அத்துடன் வருமானவரித்துறை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் கூட, பாஜகவை எதிர்ப்பதால் பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்தப்படுகிறது என்று அரசியல் செய்யலாம் என எடப்பாடி முடிவெடுத்து இருக்கிறாராம். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் இன்னமும் பாஜக விஷயத்தில் கடுமையான முடிவுகள் எதையும் எடுக்கவில்லை. எடப்பாடியின் இந்த எதிர்ப்பு முடிவுகள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps shock to ops after conversation with pyush goyal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->