BigBreaking : இபிஎஸ், சசிகலா வழக்கில் சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal



தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, இந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்க்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொடநாடு வழக்கில் கூடுதலாக சிலரை விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

அந்த வழக்கில், "கோடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட எட்டு பேரை இந்த வழக்கில் விசாரணை செய்யவேண்டும் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், "இவர்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காக மனுதாரர்கள் மூவரும் குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் தெளிவானதாக இல்லை.

 

ஏன் விசாரிக்க வேண்டும்., ஏன் அவர்களுக்கு சம்மன் அளித்து விசாரிக்க வேண்டும் என்ற காரணங்கள் விரிவாக தாக்கல் செய்யவேண்டும்" என்று மனுதாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை பதில் அளிக்க வேண்டும் என்று கோரி, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps sasikala kodanadu case chennai hc order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->