ஸ்டாலின் போடுற செருப்பை விட எனது விலை குறைவு தான்.. எடப்பாடி ஆதங்கம்.! தொண்டர்கள் சோகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட இரு கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். 

தொடர்ந்து திமுக வேட்பாளர்களும் அவர்களுடைய தொகுதியில் பல்வேறு முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், அதிமுகவின் செயல்பாடு குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

திமுகவை சேர்ந்த ஆ.ராசா ஒரு காணொளியில் எடப்பாடி பழனிசாமி குறித்து படு மோசமாக விமர்சித்து இருப்பார். அதாவது, "முந்தாநாள் வரை வெல்லமண்டியில் வேலை செய்த எடப்பாடி., ஸ்டாலினுக்கு போட்டியா? ஸ்டாலின் போடுகிற செருப்பை விட எடப்பாடியின் விலை ஒரு ரூபாய் குறைவுதான்." என்று தெரிவித்து இருப்பார்.

ஆ ராசாவுக்கு வழங்கப்போகும் முக்கிய பதவி.. மு.க. ஸ்டாலின் எடுத்த திடீர்  முடிவு.! - Seithipunal

இது சமூக வலைதளங்களில் பரவி மிகவும் சர்ச்சையை கிளப்பியது. வெல்லமண்டியில் வேலை பார்ப்பதும், கூலி தொழில் செய்வதும் என்ன அவ்வளவு கீழ்த்தரமானதா? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது. 

இத்தகைய சூழலில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பேசியுள்ளார். அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, " ஆ.ராசா என்று திமுகவில் ஒருவர் உள்ளார். அவர் என்னை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். ஒரு முதல்வர் என்றும் பாராமல் இழிவுபடுத்தினார். 

ஸ்டாலின் போடுகிற செருப்பை விட எனது விலை ஒரு ரூபாய் குறைவு' என்று கூறினார். ஆமாம் நான் ஒரு ஏழை விவசாயி. அப்படித்தான் இருப்பேன். அடித்தட்டில் இருந்து நான் முன்னேறி வந்தவன். இதை கூறுவதில் எனக்கு எந்த அசிங்கமும் இல்லை." என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS SADLY SPEECH ABOUT AA RASA VIDEO


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->