இ.பி.ஸ் ஓ.பி.ஸ்.க்கு  பேரதிர்ச்சி அதிமுகவுக்கு தடை? தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


2016 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதை எதிர்த்து, திமுக வேட்பாளர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சுய நினைவில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா எப்படி வேட்புமனுவில் கைரேகை இட்டது தொடர்பாக சரவணன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை அடுத்து கடந்த ஆண்டு ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சரவணன் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் டெல்லியிலுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

சரவணன் அளித்துள்ள அந்த மனுவில், கடந்த 2016 ஆம்  ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது, அதி.மு.க சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் விண்ணப்ப படிவத்தில் உள்ள அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கைரேகை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டஅ.தி.மு.க கட்சியின் அடிப்படை அங்கீகாரத்தை நீக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அளித்துள்ள இந்த மனுவால் அதிமுகவுக்கு சற்று அதிர்ச்சி அடைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps ops shock for election commission complain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->